SAM

இந்த‌ நாடோடி

பிற‌ந்து வ‌ள‌ர்ந்தது கொங்கு ம‌ண்ட‌ல‌த்தில் பொருள் ஆட்சி புரியும் பொள்ளாச்சியில் ஓர் அழ‌கிய‌ கிராம‌ம்.
Tuesday, July 7, 2009

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தாம்"


மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்


நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்


காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே

கடவுள்களைத் தாண்டி இவர் பாடியுள்ள விஷயங்களில் தெளிவான வாழ்வியல் உண்மை இருப்பதாக உணர்கிறேன்.

நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீமனமே
மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்
ஆற்றில் கிடந்தும் துறையறியாமல் அலைகின்றாயே


நானெத்தனை புத்தி சொன்னாலும் கேட்கிலை நன்னெஞ்சமே
ஏனிப்படிக் கெட்டு உழல்கின்றாய் இனி ஏதுமில்லா
வானத்தின் மீனுக்கு வன்தூண்டில் இட்ட வகையதுபோல்
போனத்தை மீள நினைக்கின்றனை என்ன புத்தியிதே


உண்டென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே


இந்த உபதேசம் போதாதா உழலாத மனத்துடனான உன்னத வாழ்க்கைக்கு?

Thursday, November 16, 2006

Welcome to All.